fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயாரான கடலட்டைகள் பறிமுதல்

மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி உலர்ந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மன்னார், புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியிலிருந்து மன்னார் மாவட்டப் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் இன்று (18) பிற்பகல் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இவை சுமார் 11 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியானவை என்பதுடன் சுமார் 335 கிலோ எடை கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி குமார பல்லேவல மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் சாமர ராஜபக்ச தலைமையிலான மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரே இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். குப்பிழானில் பரபரப்பு: பட்டப் பகலில் திருடிய கொள்ளையன் மடக்கிப் பிடிப்பு!! (Photos)

TamilTwin

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளை!

World News

இந்திய அரசாங்கம் விரைந்து எங்கள் மண்ணுக்கு நிரந்தர விடிவை ஏற்படுத்தித் தர வேண்டும்: செஞ்சொற்செல்வர் வேண்டுகோள் (Video)

TamilTwin