fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

கடுமையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கோவாவில் பள்ளிகள் திறப்பு!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  மார்ச் மாதம் 24 ஆம் தேதி துவங்கிய ஊரடங்கானது நவம்பர் 30 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்தநிலையில் கொரோனாவில் இருந்து ஊரடங்குத் தளர்வுகள் ஒவ்வொரு மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டு வருகின்றன,

அந்தவகையில் ஆந்திராவில் கடைசியாக அறிவிக்கப்பட்ட தளர்வில் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 2 ஆம் தேதி அன்று பள்ளிகள் தொடங்கப்பட்டது. பள்ளியில் மிகவும் கடுமையான முறையில் கொரோனாத் தொற்று பரவியுள்ளதால் அதிக அளவிலான மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.

கடுமையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கோவாவில் பள்ளிகள் திறப்பு!!

இதனால் பிற மாநிலங்கள் பள்ளி திறப்பதை தள்ளிவைத்துள்ள நிலையில், கோவா மாநிலத்தில் முதல்கட்டமாக, 10, 12 வது படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் பாதி மாணவர்களுடன் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

மிகவும் பாதுகாப்பான முறையில் கொரோனாத் தொற்று பரவாமல் தடுக்க வெப்ப பரிசோதனை, கிருமிநாசினி தெளித்தல், சானிடைசர் பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல், வகுப்புகளில் சமூக இடைவெளி எனப் பலவகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Related posts

நீதிமன்ற உத்தரவால் கைதாகிறார் நித்தியானந்தா

World News

முதன்முறையாக இராணுவச் சிப்பாய்க்கும் தொற்றியது கொரோனா

World News

அடங்கி இருக்காவிட்டால் அடக்கத்தின் போது கூட ஆள் கிடைக்காது

World News