fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் நடிகர் சத்யராஜ்

     பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு தண்டனையினை கடுமையானதாக வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.   பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சம்பவம் தமிழக்த்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் நடிகைகளும் குரல் எழுப்பி வருகின்றனர்.  குற்றவாளிகளுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்க வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். 

பொள்ளாச்சி பாலியல் கொடுமைக்கு தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் நடிகர் சத்யராஜ்

      இப்பொழுது நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தன்னுடைய கண்டனத்தினை தெரிவித்து இருக்கிறார்.  “பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அநியாயத்தின் உச்சக்கட்டம், இது அக்ரமத்தின் உச்சக்கட்டம் என பதிவிட்டு உள்ளார்.  இப்படிப்பட்ட மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது எனத் தெரியவில்லை. இவர்களுக்கு தண்டனையினை கடுமையாகவும் அதே சமயம் தாமதம் இல்லாமலும் வழங்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார்.

Related posts

ட்ரெண்டிங்கில் தெறிக்கவிடும் மாஸ்டர் படத்தின் போஸ்டர்

TamilTwin India

மகளின் 2 வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நடிகை அசின்!!

N N

டாக்டர் பட்டத்தை கலாய்த்த கஸ்தூரி, வைரலாகும் ட்விட்டர் பதிவு !

TamilTwin India