யாழ்.சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்பாள்(வடலி அம்மன்) ஆலய சர்வாலய தீப உற்சவம் (திருக்கார்த்திகை விளக்கீடு) நாளை புதன்கிழமை (07.12.2022) சிறப்பாக இடம்பெற உள்ளது.
நாளை மாலை-04 மணிக்கு அபிஷேகம், பூசைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசையும் இடம்பெறும். தொடர்ந்து முத்துமாரி அம்பாள் திருவீதி உலா வரும் போது சொக்கப்பனை ஜோதி ரூபக் காட்சியும் நடைபெறும்.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)