fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும்- மாநிலங்களவையில் சிவ சேனா நோட்டீஸ்

தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்டின் துறைமுகங்களை தனியார்மயமாக்கும் திட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் விவாதிக்க கோரி சிவ சேனா எம்பி சஞ்சய் ராவத் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிடிபி எம்பி நசீர் அகமது அளித்துள்ள நோட்டீசில், எம்.பி.எல்.ஏ.டி நிதி மற்றும் ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையின் மோசமான நிலை குறித்து ஜீரோ அவரில் விவாதிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

பகுஜன் சமாஜ் எம்பி வீர் சிங் அளித்துள்ள நோட்டீசில், ஊரடங்கு மற்றும் கொரோனா பெருந்தொற்றால் வேலையின்மை அதிகரித்திருப்பது பற்றி விவாதிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

Related posts

யாழ்.தென்மராட்சியில் நடமாடும் வங்கிச் சேவை ஆரம்பம்: அமோக வரவேற்பு! (Photos)

TamilTwin

சென்னையில் தண்ணீர் கேன்களுக்கு திடீர் தட்டுப்பாடு

World News

தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி

World News