fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அயோக்யா படத்தில் சனாகான்

                நடிகர் விஷால் மற்றும் நடிகை ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அயோக்யா.  இப்படத்திற்கு இசை அமைப்பாளர் சாம் சி. எஸ் இசை அமைத்து இருக்கிறார்.  இப்படத்தில் ஒரு பாடலுக்கு சனாகான் நடனம் ஆடி இருக்கிறார்.  வட இந்தியாவை சேர்ந்த இவர் சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்.  அதன் பின் சில படங்களில் நடித்த இவர் நீண்ட காலமாக தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.  இப்போது அயோக்யா படத்தின் மூலம் மீண்டும் ரீ – எண்ட்ரி கொடுத்து இருக்கிறாட்.

அயோக்யா படத்தில் சனாகான்

      முதலில் இப்படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் தான் நடனம் ஆட இருந்தார்.  அவருடைய கால்சீட் பிரச்சனையால் ஷரத்தா தாஸ் அப்பாடலுக்கு நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.  இப்பொழுது இப்படத்தின் பாடலுக்கு சனாகான் நடனம் ஆடி இருக்கிறார்.  இப்படம் தெலுங்கில் வெற்றி பெற்ற டெம்பர் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.  அயோக்யா படம் வருகிற ஏப்ரல் மாதம் 19 – ம் தேதி வெளியாகும் என அறிவித்து உள்ளனர்.

Related posts

காமெடி படத்தில் தமன்னா

N N

படப்பிடிப்பின் போது ரத்தக் காயம் அடைந்த யாஷிகா, யோகிபாபு

N N

ஹிந்தி படத்தில் நடிக்கும் ரங்கராஜ் பாண்டே

TamilTwin India