fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சம்பளம் உயர்த்தி வாங்கிய சமந்தா

சினிமாவில் நடிகைகளின் ஆயுள் காலம் ரொம்பவும் குறைவு. திருமணமானதும் நடிகைகள் பெரும்பாலும் நடிப்பது இல்லை. தமிழைப் போலவே தெலுங்கு சினிமா உலகத்திலும் முன்னணி நாயகியாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு பட உலகத்தின் இளம் நாயகன் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகிறார்.

சம்பளம் உயர்த்தி வாங்கிய சமந்தா

சமந்தாவின் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளம், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் ஹோலி ஏஞ்செல்ஸ் பள்ளியில் படித்து பிறகு, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்து முடித்தார். அப்போது தன்னுடைய செலவுகளுக்காக மாடலிங் துறையைத் தேர்வுசெய்து ஒருசில விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் ரேவதி நடித்த படங்கள் தான் இவருக்கு மிகவும் பிடித்தது. சமந்தா தன்னுடைய ரோல் மாடலாக ஹாலிவுட்டில் பெரும் புகழுடன் இருந்த நடிகை ஆட்ரே ஹெப்பர்ன்  கூறியிருக்கிறார்.  சமந்தா இரண்டு கோடி சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். தற்போது ‘யூ டர்ன்’ படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை இரண்டரைக் கோடியாக உயர்த்தியிருப்பதாக கூறியிருக்கிறார்.

மலையாளத்தில் அம்மா அமைப்பைப் போல், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதற்கு ஓர் அமைப்பை நிறுவ இருப்பதாக கூறப்படுகிறது.  தமிழ் நடிகைகள் எல்லோரும் சமந்தாவுக்கு முக்கியப் பொறுப்புத் தர இருக்கிறார்கள்  என சொல்லப்படுகிறது.

Related posts

வடிவேலு நடிக்கும் ‘பேய் மாமா’

N N

”ஜிப்ஸி” படம் மூலம் சினிமாவுக்கு வரும் பாப் பாடகி சுசீலா ராமன் !

TamilTwin India

நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா கூறிய பாலியல் புகார் ரத்து

N N