பிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை கருத்துகளால் அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்து கொண்டே உள்ளன. நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ராதாரவி, நயன்தாரா இன்னைக்கு ஒரு ஸ்டார். புரட்சித் தலைவர், ரஜினி படத்தோட நயன்தாரா படத்தை ஒப்பிடாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.

நயன்தாரா, பேயாகவும் நடிக்கிறார் என்றும் அந்தப் பக்கம் சீதாவாகவும் நடிக்கிறார் என்று கூறியிருக்கிறார். ராதாரவியின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு திரைத்துறை, அரசியல் மற்றும் பொது மக்கள் என பலதரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் ராதாரவியை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார்.
அதில், ராதாரவி தன் செய்தது சரி என நிரூபிக்க போராடுகிறார். உங்களைப் பார்த்தா எனக்கு பாவமாக இருக்கு. உங்கள் ஆன்மா அமைதியைத் தேட விரும்புகிறேன். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் டிக்கெட்டை நான் அனுப்புகிறேன். மன அமைதிக்காக பாப் கார்னோடு மாத்திரையையும் சேர்த்து சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளார்.