fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கொரியன் பட ரீமேக்கில் நடித்து முடித்தார் நடிகை சமந்தா

மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சமந்தா.  இவர் விஜய், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்து இருக்கிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கும் இவர் தெலுங்கு நடிகர் மற்றும் நாகர்ஜூனின் மகனும் ஆகிய நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகும் இவர் படு பிசியாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார்.

கொரியன் பட ரீமேக்கில் நடித்து முடித்தார் நடிகை சமந்தா

      இந்நிலையில் 2014 – ம் ஆண்டு கொரியன் மொழியில் வெளியான ‘மிஸ் க்ரானி’என்ற படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர்.  தெலுங்கில் இப்படத்திற்கு “ஓ பேபி” என தலைப்பு வைத்து இருக்கின்றனர். இதில் சமந்தா கதாநாயகியாக நடித்து முடித்து இருக்கிறார்.  இப்படம் சீனா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.   போட்டோ ஸ்டூடியோவிற்கு செல்லும் ஒரு பெண் மந்திர சக்திகள் மூலம் 20 வயது பெண்ணாக மாறுவதை படமாக எடுத்து இருக்கிறார்கள்.  இதில் இளமையான தோற்றத்தில் சமந்தாவும் வயதான தோற்றத்தில் லட்சுமியும் நடித்து இருக்கிறார்கள்.  கோடை விடுமுறையின் பொழுது இப்படம் வெளியாகும் எனக் கூறி இருக்கின்றனர்.
 

Related posts

விஜய் சேதுபதி, கௌதம் மேனன் கூட்டணி, ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

TamilTwin India

ரசிகரை சரமாரியாக திட்டிய நிவேதா தாமஸ்!

N N

ட்விட்டரில் போலி கணக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

TamilTwin India