fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கன்னடப் படத்தில் சாய் பல்லவி

பிரபல நடிகை சாய் பல்லவி, பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது கன்னடத்தில் தயாராகவுள்ள மெகா பட்ஜெட் படத்தில் ஹீரோயினியாக அறிமுகமாகிறார்.

      பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தை அடுத்து நடிகை இவர், தெலுங்கில் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி என்ற படங்களில் நடித்தார். பின்னர், மாரி 2 படத்தில் தனுஷுடன் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தில் வெளியான ரவுடி பேபி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இதற்கு முன்னதாக பிரேமம் படத்தின் மூலம் இவரது நடிப்பு வெளியுலகிற்கு தெரிய வந்தது.

கன்னடப் படத்தில் சாய் பல்லவி

இதையடுத்து, தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். மேலும் பகத்பாசிக்கு ஜோடியாக அதிரன் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.. இந்தநிலையில், இவர் முதன்முதலாக ஒரு கன்னட படத்தில் அறிமுகமாகிறார். கன்னட நடிகை ரக்ஷிதாவின் கணவர் பிரேம் இந்த படத்தை இயக்குகிறார். சாய் பல்லவி லீடு ரோலில் நடிக்கும் இந்த படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.

Related posts

போதை மருந்து விவகாரம், ஜெயம் ரவி பட நடிகை கைது.!

TamilTwin India

உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்த கமல்

TamilTwin India

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவ படுத்திய பிரபல இசையமைப்பாளர்கள்

TamilTwin India