fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

சபரிமலை பக்தர்கள் மலையேறும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை… முதல் மந்திரி பேட்டி!!

இந்தியாவில் தற்போதைய ஊரடங்கு தளர்வில் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இருப்பினும் சில விதிமுறைகளுடன் இந்த அறிவிப்பானது வெளியானது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

சபரிமலைக் கோவிலில் பக்தர்களை அனுமதிக்க கடந்த மாதம் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர் மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

சபரிமலை பக்தர்கள் மலையேறும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை... முதல் மந்திரி பேட்டி!!

இந்த குழுவினரின் அறிக்கையின் படி சபரிமலை ஐயப்பன் கோவில் அக்டோபர் 16 ஆம் தேதி திறக்கப்படும் என்றும், மேலும் வழிபட வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்களின்படி செயல்படுதல் வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கோயில் திறக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், “பக்தர்கள் முகக் கவசம் கோவிலுக்கு வரும்போது அணிந்திருக்க வேண்டும் என்ற போதில், மலையேறும்போது முகக்கவசம் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதனால் பக்தர்கள் மலையேறும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை.

மேலும் பக்தர்கள் முடிந்த அளவு நெருக்கமாக நடந்து செல்வதைத் தவிர்த்தல், கிருமிநாசினியை சரியாகப் பயன்படுத்துதல் என பாதுகாப்பு முறைகளைக் கடைபிடித்தல் வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

Related posts

பாதுகாப்பு அமைச்சர் இல்லாத நிலையில் இலங்கை!!

TamilTwin

தமிழக கடற்கரையில் ஒதுங்கிய டொல்பின்

World News

சென்னை – செங்கல்பட்டு புறநகர் ரயில்களில் முதல்முறையாக ஏசி

N N