இந்தியாவின் தலையாய அடையாள அட்டைகளில் ஒன்றாக இருப்பது ஆதார் அட்டைதான்.
ஆதார் அட்டையில் ஒரு நபரின் பிறந்தநாளில் துவங்கி, கை ரேகை, கண் ரேகை என அனைத்துத் தகவல்களும் உள்ளது.
தற்போது இந்தியாவின் அனைத்து வகையான இடங்களிலும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் துவங்கி பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தல் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கட்டாயமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் வருமான வரிக் கணக்கு ரீதியான கண்காணிப்பினைக் கருத்தில் கொண்டு பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
மேலும் இதற்கான காலக் கெடுவானது மார்ச் 31ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை அலுவலகம் அவகாசம் அளித்தது. அதன் பிறகு பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது.
மார்ச் 30 ஆம் தேதிக்கு பின் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் இருப்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
ஜூன் 30 க்குப் பின்னரும் பான் கார்டு எண்ணை ஆதார் கார்டு எண்ணுடன் இணைக்காவிட்டால் அபராதம் ரூ.1000 வசூலிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலற்றதாகி விடும் என்று கூறப்பட்டுள்ளது.