யாழ்.பல்கலைக்கழகத்தில் ஓய்வுநிலை நூலகர் ரோகிணிக்கு அஞ்சலி(Photos)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலை நூலகர் அமரர்.ரோகிணி பரராஜசிங்கத்தின் நினைவஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(27.5.2022) பிற்பகல்-2.30 ணிக்கு யாழ்.பல்கலைக்கழக நூலகப் பதில் நூலகர் திருமதி.கல்பனா சந்திரசேகர் தலைமையில் யாழ்.பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நினைவஞ்சலி நிகழ்வில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு ஓய்வுநிலை நூலகர் அமரர். ரோகிணி பரராஜசிங்கத்தின் உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு நினைவு உரைகள் ஆற்றினர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)