fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ

இந்தியாவில் அதிகமான கழிவுநீர் தொட்டிகள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் உள்ளே இறங்குகின்றனர். அப்போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் இறந்து விடுகின்றனர். அதனால் தொழிலாளர்கள் குடும்பங்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகுகின்றனர். விஷவாயு தாக்குதலில் வரும் உயிரிழப்பைத் தவிர்க்க ரோபோவை உருவாக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ

ரோபோக்களை கழிவுநீர் தொட்டிக்குள் இறக்கி அது சுத்தும் விசிறிகள் மூலம் அலசி சுத்தம் செய்யும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருப்பது போன்ற சுழலும் மின்விசிறி பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் சுழலும் விசிறியில் உள்ள பிளேடுகள் கழிவு நீருக்குள் புகுந்துதொட்டியை அலசுவதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால்  விசிறியில் 6 துடுப்புகள் போன்ற பிளேடுகள் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இந்த சுழலும் விசிறியை மாணவர் ஸ்ரீகாந்த் உருவாக்கினார்.

கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும்  ரோபோவின் செயல்பாடு  குறித்த பரிசோதனையை  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  ஜூலை மற்றும் ஆகஸ்டில் கழிவுநீர் தொட்டியில் பரிசோதனையானது  மேற்கொள்ளப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மிகவும் குறுகிய  பகுதிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மிக குறுகிய தெருக்களில் வாகனங்களை மற்றும் பம்புகளையும் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் ‘ரோபோ’வை எளிதாக எடுத்து சென்று  கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய முடியும்.

Related posts

ராணுவ நடவடிக்கையை நிறுத்தவேண்டும் – அமெரிக்கா

N N

ஆம் ஆத்மி முக்கியஸ்தர் மீது துப்பாக்கி சூடு!- தொண்டர் பலி (Video)

World News

தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்! கோத்தபாய

World News