fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரித்திகா சிங் படத்திற்கு தடை

இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ரித்திகா சிங்.  இப்படத்தில் இவர் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்து இருந்தார்.  தற்போது இவர் நடிப்பில் வெளிவர உள்ள படம் மீடு.  பெண்களுக்கு பணிபுரியும் இடங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் கொண்டு வருவதற்கு உருவாக்கப்பட்ட இயக்கம் மீடு ஆகும்.  இந்த இயக்கம் சர்வதேச அளவில் பிரபலமானது.  இதில் பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்ததைப் பற்றி கூறி இருக்கின்றனர்.  சினிமாவில் பணிபுரியும், நடிகைகள், பாடகிகள் உட்பட அனைவருமே இதில் புகார் கூறி இருக்கின்றனர்.

ரித்திகா சிங் படத்திற்கு தடை

      தற்போது இக்கருத்தினை மையமாக வைத்து மீடூ என்று படம் எடுக்கப்பட்டு உள்ளது.  இதில் ரித்திகா சிங் கல்லூரி மாணவியாக நடித்து இருக்கிறார்.  இதில் இவருக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைப் பற்றி இப்படம் எடுத்துக் கூறுகிறது.  இந்நிலையில் படத்திற்கு சில வசனங்கள் காரணமாக தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க மறுத்தது.  மீண்டும் ஒரு முறை படமானது தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்டது.  தற்போது படத்தின் தலைப்பு சரி இல்லை எனக் கூறி படத்திற்கு தணிக்கைக் குழுவினர் சான்றிதழ் வழங்க மறுத்துள்ளனர்.  இவ்விவகாரத்தினால் படத்தின் தயாரிப்பாளர் சஜித் குரேஷி கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.

Related posts

தயாராகிறது சந்தானத்தின் ‘பிஸ்கோத்’

TamilTwin India

மனைவி மற்றும் மகனுடன் மகாபலிபுரம் கடற்கரையில் அஜித்!

N N

ஹீரோயினியாக களமிறங்கும் சில்லுனு ஒரு காதல் ஷ்ரியா சர்மா

TamilTwin India