நாட்டில் மீண்டும் அதிகரித்த அரிசியின் விலை

இலங்கையின் பல்வேறு சந்தைகளில் அரிசியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

வர்த்தகர்கள் அரிசி விலையை தன்னிச்சையான அதிகரித்து விற்று மக்களை சுரண்டுவதாகவும், இதனால் தாங்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான கடைகளில் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 160 முதல் 180 ரூபாவுக்கும், நாட்டு அரிசி 170 முதல் 190 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 முதல் 260 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறை காரணமாக அரிசியின் விலை கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.