fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜுலை 14 ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 1983 உலகக் கோப்பைப் போட்டியை இந்திய அணி வென்றது. இது தொடர்பான ஒரு பாராட்டு விழாவில் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டார்கள். இதில் பேசிய முன்னாள் வீரர் கிருஷ் ஸ்ரீகாந்த் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்

     உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வில் 4 ம் நிலை வீரருக்கான இடம் தான் குழப்புகிறது. நான் கேப்டனாகவோ தேர்வுக்குழுத் தலைவராகவோ இருந்தால் மேட்ச் வின்னரை தான் தேர்வு செய்வேன். இங்கிலாந்தில் வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒரு டெஸ்டில் வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார் ரிஷப் பந்த் . அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். என்னுடைய கிரிக்கெட் காலத்தில் கபில் தேவ் அப்படியொரு நம்பிக்கையை எனக்கு அளித்தார். அதே போல ரிஷப் பந்துக்கும்  சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அவரால் குறைந்தபட்சம் 3 ஆட்டங்களிலாவது வெற்றியை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Related posts

கரோனா: இந்தியாவில் பதிவாகிய முதல் மரணம்

World News

கைம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்களை தூக்கிலிட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!!

TT Media

இன்று ஆடிப்பெருக்கு திருநாள்

N N