fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

கைது உத்தரவு செய்தி அறிந்து தப்பிச்சென்ற ரிஷாட் பதியுதீன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தான் விரைவில் கைது செய்யப்படுவேன் என்பதை தனது வாகனத்திலுள்ள வானொலிச் செய்தி மூலம் அறிந்து புத்தளம் – சிலாபம் வீதியில் வாகனத்தைக் கைவிட்டு விட்டுத் தப்பித்தாரென குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரிஷாட் பதியுதீன் கடந்த- 13 ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்புக்குச் சென்றுள்ளார். பயணத்தின் போது தனது வாகனத்திலுள்ள வானொலியில் ஒலிபரப்பான தனியார் வானொலி அலைவரிசையொன்றின் செய்தியைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார்.

சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உடனடியாக பதியுதீனைக் கைது செய்து காவலில் வைக்குமாறு அறிவித்ததாக குறித்த செய்தி அமைந்திருந்தது.

உடனே சாரதியிடம் புத்தளம் – சிலாபம் வீதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறு கூறியதுடன் உடன் அதிலிருந்து வெளியேறிப் பிறிதொரு வாகனத்தில் புத்தளத்துக்குத் தப்பியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

இணையத்தில் வைரலாகும் மயக்கம் வருவதுபோல் நடிக்கும் குதிரை!!

World News

கொழும்பில் நிர்க்கதியாகவிருந்த ஒரு தொகுதி மக்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

World News

நித்யானந்தா வெளிநாடு சென்றதற்கான அதிகாரபூர்வ தகவல் இல்லை! வெளியுறவுத் துறை அமைச்சர்

World News