Saturday, June 25, 2022
HomeEvents-நிகழ்வுகள்கொக்குவிலில் மாணவர்களுக்கான சத்து உணவிற்காகப் பூமணி அம்மா அறக்கட்டளையால் நிதி உதவி கையளிப்பு(Photos)

கொக்குவிலில் மாணவர்களுக்கான சத்து உணவிற்காகப் பூமணி அம்மா அறக்கட்டளையால் நிதி உதவி கையளிப்பு(Photos)

யாழ்.கொக்குவில் ஸ்தான சி.சி. தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 105 மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கான சத்து உணவு வழங்குவதற்காகப் பூமணி அம்மா அறக்கட்டளையால் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.

இன்று முற்பகல்-10 மணியளவில் மேற்படி பாடசாலை மண்டபத்தில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான யாழ்.தீவகம் வேலணை மேற்குச் சரவணையைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான தலைவர் நா.தனேந்திரன்,செயலாளர் விந்தன் கனகரட்ணம், மேற்படி அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் இணைந்து பாடசாலையின் அதிபர் திருமதி பி.சண்முகராஜா மற்றும் சிரேஷ்ட ஆசிரியர் திருமதி.தயாநிதி தர்மரத்தினம் ஆகியோரிடம் எண்பதினாயிரம் ரூபாவை நிதியை இன்றையதினம் நேரடியாக வழங்கி வைத்தனர்.அத்துடன் மாணவர்களுக்கான சத்து உணவுத் திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தனர்.

அரசாங்கத்தினால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த சத்து உணவுத் திட்டத்திற்கான நிதிக் கொடுப்பனவுகள் கடந்த ஐந்து மாதங்களாக அரசால் நிறுத்தப்பட்ட நிலையில் வறிய குடும்பங்கள் பலவற்றின் பிள்ளைகள் வீட்டில் காலை உணவை உண்ண வசதி இல்லாமல் பாடசாலையால் வழங்கப்படும் உணவையே நம்பி வருகின்றனர். இந்தநிலையில் குறித்த பாடசாலைக்கு இன்றையதினம் பூமணி அம்மா அறக்கட்டளையால் நிதி உதவி கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular