fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க எதிர்ப்பு

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பின் அவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ் சினிமா இயக்குநர்கள் படம் எடுப்பதற்கு போட்டி போடுகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் அவர் ஜெயலலிதா வாழ்க்கையை ஒரு இணைய தொடராக உருவாக்கி வருகிறார். விஜய்  இயக்கும் தலைவி என்னும் படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிப்பதாக கூறப்படுகிறது.  தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தவர் கங்கனா ரனாவத். சமீபத்தில்  ஜான்சி ராணியாக நடித்த மணிகர்ணிகா  என்ற படம் மாபெரும் வெற்றிபெற்றது.

கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க எதிர்ப்பு

ஏ.எல்.விஜய் இயக்கும்  தலைவி படத்திற்கு ஜி.வி பிரகாஷ்  அவர்கள் இசை அமைக்கிறார்., பாகுபலி படத்தின் கதையாசிரியரான விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு இணை கதாசிரியராக இணைகிறார். கவுதம் மேனன் இயக்கும் தொடரில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணனும், சசிகலாவாக விஜி சந்திரசேகரும் நடிக்கின்றார்.  ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரும்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எங்களால் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவை நினைத்து கூட பார்க்க முடியாது. நித்யா மேனன்  தான் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக பொருந்தினார் என கூறப்படுகிறது.

Related posts

குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் வைரல் புகைப்படம்..!

TamilTwin India

ரெமோ இயக்குநருடன் இணையும் கார்த்தி

N N

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் திடீரென இணைந்த அனிருத்

N N