கொரோனாத் தொற்று இந்தியாவில் மார்ச் மாதம் பரவத் துவங்கியது, அதன்படி மார்ச் 24 ஆம் தேதி துவங்கி இந்தியாவில் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.
ஏறக்குறைய 5 கட்டங்களாக ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு இருந்தநிலையில் தற்போது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது மக்கள் ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் போக்குவரத்து, நிறுவனங்கள் இயங்குதல், ஹோட்டல்கள் மற்றும் கடைகள் செயல்படுதல் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது.

இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறவுள்ள கொரோனா தொற்று காரணமாக குடியரசு தின கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழக அரசின் அறிவிப்பில், “மூத்த குடிமக்கள், பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் குடியரசு தின விழாவை காண வருவதை தவிர்க்க வேண்டும். குடியரசு தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் சமீபத்தில் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா ஒத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.