fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் போதும், உடனடியாக நீட் தேர்வானது தாமதிக்காமல் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

ஆனால் நீட் தேர்வு திடீரென அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் அவதிப்பட்டனர்.

மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து 14 ஆம் தேதி தேர்வானது நடைபெற்று முடிந்தது.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியியானது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை http://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு முந்தைய வாரங்களில் தொடர் தற்கொலைகள் நடந்ததைப் போல் தேர்வு முடிவுகள் வெளியான இன்று எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் கூடுதல் கவனத்தில் உள்ளனர்.

Related posts

போராட்டம் நடாத்திய மாணவர்கள் மீது இரசாயண தாக்குதல்! மருத்துவமணையில் அனுமதி

World News

உலகக்கோப்பையில் இந்தியா தான் நம்பர் 1 – சாஹல்

N N

விசாகப்பட்டினம் இராசயன ஆலையில் வாயுக் கசிவு: 3 பேர் மரணம், நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

World News