fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மீசைய முறுக்கு திரைப்படத்தின் வழியாக இயக்குநராகவும், கதா நாயகனாகவும் ஹிப் ஹாப் ஆதி அறிமுகமானார்.  இப்போது பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகி உள்ள படம் நட்பே துணை படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

      ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து பார்த்திபன் தேசிங்கு இயக்கி உள்ள நட்பே துணை படத்தில் நடித்து இருக்கிறார். இதில் ஆதிக்கு ஜோடியாக புதுமுகம் அனகா தமிழில் அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கரு.பழனியப்பன்  நடித்துள்ளார். அவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கிறார்கள்.

     இந்தப் படத்தை சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் சுந்தர்.சி தயாரித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தை வருகிற ஏப்ரல் 4-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.

Related posts

யுடியூபை தெறிக்க விட்ட ரவுடிபேபி பாடல், 800 மில்லியனை தாண்டியது !

TamilTwin India

தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு, விமல் அதிரடி முடிவு !

TamilTwin India

சிவகார்த்திகேயனின் ஹீரோ தலைப்புக்கு சிக்கல்

N N