பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 16 வயதுடைய பாடசாலை மாணவியும் 20 வயதுடைய இளைஞரும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் பொஹெம்பியகந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த இருவருக்கும் காதல் தொடர்பில் இருந்ததாக கரந்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.