fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வதற்கான காரணங்கள்

கோடையில் தலைமுடி அதிகமாக உதிர்வதற்கு முக்கிய காரணம், வியர்வை. கோடையில் அதிகம் வியர்ப்பதால், தலைமுடியின் மயிர் கால்கள் வலிமையின்றி இருக்கும். இந்த சமயத்தில் சீப்பு கொண்டு அளவுக்கு அதிகமாக சீவினால், தலைமுடியை வேரோடு கையில் வந்து விடும். எனவே சீப்பை அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம்.

கோடையில் தலைமுடி அதிகம் உதிர்வதற்கான காரணங்கள்

       கோடையில் முடி எப்படி அதிகம் உதிருகிறதோ, அதேமாதிரி  முடியின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும். மற்ற காலங்களை விட கோடையில் உடலில் இரத்த ஓட்டமானது அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் வெப்பமான காலங்களில் உடலின் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனால் உடலில் இரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும். ஆகவே கோடைகாலத்தில் முடி வளர்வதற்கு தேவையான பராமரிப்புகளை மேற்கொண்டால் முடி நன்றாக இருக்கும். கோடை காலத்தில் தினமும் தலைக்கு குளிப்பதனால் தலையில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆனால், தலைக்கு ஷாம்பு அதிகமாக போடக்கூடாது.  ஷாம்பு அதிகமாக போட்டால் முடி உதிர்வதோடு, ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய்களும் நீங்கிவிடும்.

    முக்கியமாக தலைமுடிக்கு சூரியக்கதிர்கள் நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோடையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தலையில் ஏதாவது போட்டு வெளியே போக வேண்டும்.

Related posts

சருமப் புத்துணர்ச்சிக்கு பாதாம் எண்ணெய் பேஸ்பேக்!!

N N

முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர எளிமையான டிப்ஸ்!!

N N

கூந்தல் வளர்ச்சியினைத் தூண்டும் எளிமையான டிப்ஸ்!!

N N