யாழ்.அளவெட்டியைச் சேர்ந்த மாற்றம் சிறிலங்கா அமைப்பின் பணிப்பாளரும், போரூட் நிறுவனத்தின் முன்னாள் அணித் தலைவரும், சமூக சேவகருமான இரத்தினம் சிவநாயகம் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி பெருமாள் சிவகுமார் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேற்படி நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28.11.2022) காலை-09 மணியளவில் மல்லாகம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

இதேவேளை, இரத்தினம் சிவநாயகம் அளவெட்டி- மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவராகவும், தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன் மேலும் பல பொது அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)