ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமரானமையை முன்னிட்டு ஐக்கியதேசியக் கட்சியின் வலி.தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் பாலசிங்கம் சுரேஷ்குமார் மற்றும் ஐக்கியதேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்.சுன்னாகம் நகரத்திலும், சுன்னாகத்தில் அமைந்துள்ள வலி.தெற்குப் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும் வெடி கொளுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல்-11.30 மணியளவில் அவர்கள் இவ்வாறு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)