fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரஜினிகாந்தின் அடுத்த படம் ஏப்ரல் 10 இல் துவக்கம்

நடிகர் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கான தயாரிப்பு பணியில் ஈடுபட்ட படக்குழுவின் விரைவான செயல்களால், தற்போது படப்பிடிப்பானது முழுமையாக தயாராகியுள்ளது. படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் தொடங்கயுள்ளது. துப்பாக்கி படத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து இருந்திருந்தார். இப்படம் மும்பையை கதை களமாகக் கொண்டு உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 10-ல் தொடங்குகிற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை  நடந்து கொண்டிருக்கிறது. அனிருத்  இந்த  படத்துக்கும் இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு  செய்கிறார்.

ரஜினிகாந்தின் அடுத்த படம் ஏப்ரல் 10ல் துவக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் தான் இருப்பார். ஏதாவது பிரசாரத்துக்கு அழைப்பதற்கோ அல்லது  ஆதரவு கேட்டோ தன்னுடைய அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காக தேர்தலுக்கு முன்பாகவே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு  ஏதாவது ஒரு வேலையில் அதிக பிசியாக இருப்பார் ரஜினிகாந்த். தற்போது வரும் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தார். அதேபோல்  தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

Related posts

கார்த்திக்கு கட்டளை இட்ட மணிரத்னம், பொன்னியின் செல்வன் அப்டேட்..!

TamilTwin India

தளபதி 65 படத்திற்கு இசை அமைக்கும் பிரபல தெலுங்கு இசை அமைப்பாளர்!

TamilTwin India

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய பாலிவுட் நடிகை

TamilTwin India