கோவில்பட்டி அருகே உள்ள குருமலையில் 18 – ஆம் படி கருப்பசாமி மற்றும் அலங்கார ஈஸ்வரி தாயார் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட மண்டபங்களை திறந்து வைப்பதற்காக நடிகர் விவேக் வந்து உள்ளார். அவர் அந்த மண்டபங்களை திறந்து வைத்தார். இதன் பின்னர் நடிகர் விவேக் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியதாவது, கூட்டணிகள் எவ்வளவு இருந்தாலும் முடிவு மக்கள் கையில் தான் உள்ளது. எவ்வளவு பெரிய கூட்டணிகள் அமைந்தாலும் அனைவரும் பொது மக்கள் என்ற சக்தியின் முன் தான் ஒன்று கூடுகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம், யார் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் ஆனால் வெற்றியினை தீர்மானிப்பவர்கள் மக்கள் தான் என கூறி உள்ளார்.

மேலும் அவர் ரஜினி முதலில் இருந்தே தெளிவாக உள்ளார். அவர் பின்வாங்கவில்லை என அவர் கூறி இருக்கிறார். ரஜினி சட்டமன்ற தேரதலில் தான் போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். சட்டமன்ற தேர்தலில் போட்டி இடுவதில் அவர் தெளிவாக இருக்கிறாட். வரும் தேர்தலில் எல்லோரையும் போல நானும் மக்கள் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என கூறி உள்ளார்.