Friday, February 3, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்யாழில் இடையிடையே பதிவாகும் மழைவீழ்ச்சி(Photos)

யாழில் இடையிடையே பதிவாகும் மழைவீழ்ச்சி(Photos)

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் புதன்கிழமை (30.11.2022)இரவு-07 மணி முதல் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கும் மேலாக கடும் மழைவீழ்ச்சியும், பின்னர் இரவு-11 மணியளவிலும் மிதமான மழைவீழ்ச்சியும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை(01.12.2022) முற்பகல்-11.15 மணி முதல் சுமார்-15 நிமிடங்கள் வரையும், பின்னர் பிற்பகல்-12.30 மணி முதல் சில நிமிடங்களுக்கு மிதமான மழைவீழ்ச்சியும், இடையிடையே தூறல் மழைவீழ்ச்சியும் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பதிவாகியிருந்தது.

இன்று வெள்ளிக்கிழமை(02.12.2022) முற்பகல்-10.15 மணி முதல் சுமார் 15 நிமிடங்களுக்கு மிதமான மழைவீழ்ச்சியும், இன்று நண்பகல்-12 மணி முதல் சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேலாக ஓரளவு மழைவீழ்ச்சியும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பதிவாகி உள்ளன.

நேற்று முன்தினம் புதன்கிழமை(30.12.2022) காலை-08.30 மணி முதல் நேற்று வியாழக்கிழமை(01.12.2022) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் திருநெல்வேலியில் 23.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில் யாழ்.நகரத்தில் 21.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்ப்பாணம் கோட்டையில் 20.0 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.வடமராட்சி அம்பனில் 16.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அச்சுவேலியில் 12.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், தெல்லிப்பழையில் 10.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று வியாழக்கிழமை(01.12.2022) காலை-08.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை(02.12.2022) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகி உள்ளதாகவும் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular