Friday, February 3, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்யாழில் பதிவான கடும் மழை: மழைவீழ்ச்சி விபரம்

யாழில் பதிவான கடும் மழை: மழைவீழ்ச்சி விபரம்

யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2022) இரவு கடும் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. இதனால், வீதிகள் பலவற்றிலும், தாழ்நிலப் பகுதிகளிலும் மழைவெள்ளநீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை(02.12.2022) காலை-08.30 மணி முதல் இன்று சனிக்கிழமை(03.12.2022) காலை-08.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்டத்தில் அச்சுவேலியில் 28.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 11.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், யாழ்.நகரத்தில் 11.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதியில் கிளிநொச்சி நகரத்தில் 23.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், அக்கராயனில் 22.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular