fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

முள்ளங்கி பொரியல்

முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோயைக் குணமாக்குவதோடு, குரலை இனிமையாக்குகிறது. பசியை தூண்டக்கூடியது, சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் முடி உதிர்தலை  குணப்படுத்தக் கூடியது.

முள்ளங்கி  பொரியல்

         உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் முள்ளங்கியை ஜூஸாக அருந்தி வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும். முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருந்தால் நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும். முள்ளங்கியில் நீர்சத்து அதிகளவில் உள்ளது. அதனால் கோடைக் காலத்தில் முள்ளங்கியினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

முள்ளங்கி பொரியல் - Radish Fry

முள்ளங்கி  பொரியல் முள்ளங்கி பொரியல் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 50 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • முள்ளங்கி - 1
  • வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 1
  • காய்ந்த மிளகாய் - 1
  • பயத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய்த்துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  • வறுத்த வேர்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • கடுகு - சிறிதளவு
  • உளுந்தம் பருப்பு - தேவையான அளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

Instructions

பயத்தம்பருப்பை  சிறிதளவு தணணீர் சேர்த்து ஊற வைத்து கொள்ளவும்.  வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முள்ளங்கியை தோல் சீவி பின் பொடியாக நறுக்கி  வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் போட்டு தாளித்த பின் நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கியதும், பின் அதில் ஊறிய பயத்தம் பருப்பு, முள்ளங்கி  மற்றும் உப்பு சேர்த்து  வதக்கி பின் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். பின் வெந்தவுடன்  தேங்காய்த் துருவல், வேர்க்கடலை  சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related posts

சுவையான மாம்பழ லஸ்ஸி

N N

சத்து மாவு உருண்டை

N N

தித்திப்பான மைசூர் பாகு செய்யலாம் வாங்க!!

N N