fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நயன்தாராவை கலாய்த்த ராதாரவி
சினிமா

நயன்தாராவை கலாய்த்த ராதாரவி

தமிழ் சினிமாவில் பெருபாலமான முன்னணி நடிகை நயன்தாரா. இமைக்க நொடிகள், விஸ்வாசம் போன்ற படங்களை தொடர்ந்து இப்பொழுது விக்கேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள கொலையுதிர் காலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படவிழாவில் கலந்துக் கொண்ட ராதாரவி நயன்தாராவை கலாய்த்து பேசியுள்ளார்.

நயன்தாராவை கலாய்த்த ராதாரவி

     ராதாரவி கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு விழாவில் நயன்தாராவை பற்றி பேசியது. ‘சினிமாத் துறையில் லெஜண்ட் ஆன எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவர்கள். இவர்களுடன் நயன்தாராவை ஒப்பிடுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நயன்தாரா நல்ல நடிகையாக இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம் அவரைப் பற்றி பத்திரிக்கையில் வராத செய்தியே கிடையாது. அதை எல்லாம் தாண்டி இன்னும் சினிமாவில் நிற்கிறார்கள். நயன்தாரா ஒரு பக்கம் பேயாகவும் நடித்து இருக்கிறார்.  இன்னொரு பக்கம் சீதாவாகவும் நடித்து இருக்கிறார்.

     கே.ஆர்.விஜயா அவர்களை சாமி வேஷம் போட தேடுவார்கள். ஆனால் இப்பொழுது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் பார்த்தவுடன் கும்பிடவும்,  கூப்பிடவும் தோன்றுபவர்களும் நடிக்கலாம்” என நயன்தாராவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Related posts

”கொரோனா ஆவண படம்” தயாரிக்கும் கௌதம் மேனன்.!

TamilTwin India

குழந்தைகளுக்கு பள்ளிக்கூடம் கட்டி கொடுத்த காஜல் அகர்வால்

N N

மிரண்டு போன கோலிவுட், ரிலீசுக்கு முன்னரே ”மாஸ்டர்” 200 கோடி பிசினஸ்

TamilTwin India