Sunday, September 26, 2021
HomeEvents-நிகழ்வுகள்ஊடக ஜாம்பவானின் ஆத்மசாந்திக்காக யாழில் சர்வமதப் பிரார்த்தனை (Photos)

ஊடக ஜாம்பவானின் ஆத்மசாந்திக்காக யாழில் சர்வமதப் பிரார்த்தனை (Photos)

கடந்த-25 ஆம் திகதி இறைபதமடைந்த ஊடக ஜாம்பவானும், Capital Maharaj நிறுவனத்தின் பெருந் தலைவரும், தொழிலதிபருமான அமரர் ஆர்.இராஜமகேந்திரனின் ஆத்மசாந்தி வேண்டி சர்வமதப் பிரார்த்தனை இன்று ஞாயிற்றுக்கிழமை(01-08-2021) பிற்பகல் யாழ்ப்பாணம் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீனபீட முதல்வர் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட நான்கு மதங்களையும் சேர்ந்த சர்வமதத் தலைவர்கள் கலந்து கொண்டு அமரர் ஆர்.இராஜமகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், சர்வமதப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதேவேளை, கொவிட் தொற்று நிலைமை காரணமாக சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து மேற்படி நிகழ்வு இடம்பெற்றதுடன் நிகழ்வில் மட்டுப்படுத்தப்பட்டோருக்கான அனுமதியே வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித்தொகுப்பு- எஸ்.ரவி)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments