fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் புரவி புயலால் அசாதாரண நிலைமை: நேரில் ஆராய்ந்தார் முதல்வர்! (Photos)

யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களான கொழும்புத்துறை, ஈச்சமோட்டை, பாசையூர், கடற்கரை வீதி, பற்றிக்ஸ் வீதி, மத்தியூஸ் வீதி, நல்லூர், மாநகரப் பண்ணை பூங்கா பகுதி, நாவாந்துறை, சூரிய வெளி, சோனகதெரு, ஸ்ரான்லி வீதி, கோவில் விதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் புரவி புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அசாதாரண நிலைமைகள் உள்ளிட்ட விடயங்களை யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் இன்று வியாழக்கிழமை (03) நேரில் சென்று ஆராய்ந்தார்.

குறித்த விஜயத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டு ஆராய்ந்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகர சுகாதாரப் பிரிவினால் மேற்கொள்ளக் கூடிய விடயங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை, யாழ்.மாநகரத்திற்குள் ஏற்பட்டுள்ள புரவி புயல் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவிற்கு உரிய தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

{செய்தித் தொகுப்பு:- எஸ். ரவி}

Related posts

ஒக்ரோபர் பிற்பகுதியில் வெளியாகிறது ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு!!

TamilTwin

யாழில் கனமழை: நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு! (Video, Photos)

N N

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற வாணி விழா (Photos)

N N