Thursday, December 1, 2022
HomeEvents-நிகழ்வுகள்புன்னாலைக்கட்டுவன் கணேசா முன்பள்ளியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு: விருந்தளித்த கலைநிகழ்வுகள்(Photos)

புன்னாலைக்கட்டுவன் கணேசா முன்பள்ளியில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு: விருந்தளித்த கலைநிகழ்வுகள்(Photos)

யாழ்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா முன்பள்ளியின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று சனிக்கிழமை(01.10.2022) காலை-9 மணியளவில் மேற்படி முன்பள்ளி முன்றலில் புன்னாலைக்கட்டுவன் தெற்கு கணேசா சனசமூக நிலையத் தலைவர் சி.செல்வஸ்கந்தராஜா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் புன்னாலைக்கட்டுவன் மகாவித்தியாலய அதிபர் க.முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் முன்பள்ளிச் சிறுவர், சிறுமிகளின் குழு நடனம், வேப்பிலை நடனம் ஆகிய கலைநிகழ்வுகள் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட முன்பள்ளிச் சிறார்கள் அனைவரும் பரிசில்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular