Saturday, June 25, 2022
Homeஆன்மிகம்புன்னாலைக்கட்டுவன் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் மஹோற்சவம் ஆரம்பம்(Photos)

புன்னாலைக்கட்டுவன் இராஜஇராஜேஸ்வரி அம்பாள் மஹோற்சவம் ஆரம்பம்(Photos)

யாழ்.புன்னாலைக்கட்டுவன் வடக்கு(கடவத்தறை) ஸ்ரீ இராஜஇராஜேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெற்றுவரும் இவ் ஆலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும், 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-9 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-9.30 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-7 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இவ் ஆலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் காலை-9 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-5 மணிக்கும் பூசையுடன் ஆரம்பமாகும் எனவும் ஆலய பரிபாலன சபையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular