fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை
சினிமா

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் இன்று ரிலீசான நிலையில் படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

     ஆரண்ய காண்டம் படத்திற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்தப் படம் இன்று உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை

               இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி சட்ட விரோத இணைய தளங்களில் சூப்பர் டீலக்ஸ் படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

Related posts

சம்பளத்தைப் பாதியாகக் குறைத்த நிறுவனம் சரியென்று தலையாட்டிய முருகதாஸ் !

TamilTwin India

”ஒரு நாளைக்கு 25 லட்சம்” நயன்தாரா செய்த செயல், மிரண்டுபோன ரசிகர்கள்..!!

TamilTwin India

சூரியை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பேன், வெற்றிமாறன் !

TamilTwin India