குடிமகன் படத்தில் பிரபல கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானத்தின் பேரன் ஜெய்குமார் கதாநாயகனாகவும், நடிகை ஜெனிபர் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். படத்தின் மையக்கருத்து “குடிப்பவர்கள் கூட நிம்மதியாக தூக்கி விடுவார்கள் ஆனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்பதே.

விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்ட அழகான கிராமத்தில் கந்தன், செல்லக்கண்ணு குடும்பத்தில் ஆகாஷ் என்ற 8 வயது மகன் இருந்தான். இருவரும் மகனின் மீது அதிக அன்பும், பாசமும் கொண்டு வளர்த்தார்கள். மகிழ்ச்சியாக இருந்த வாழ்விலும், அந்த கிராமத்து மக்களின் வாழ்விலும் ஊர் கவுன்சிலர் ஒரு மதுபானக் கடையினைக ஊருக்குள் கொண்டு வந்து பேரதிர்ச்சியைத் தந்தார். அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள், ஊர்த் தலைவரின் சார்பில் போராட்டத்தில் இறங்கினார்கள். போராட்டத்தில் பிரச்சனை பெரிதானதால் காவல்துறை வந்து கடையை மாற்றி விடுவதாக கூறுகிறார். நாட்கள் கடந்த நிலையில் ஊரில் உள்ள அனைத்து ஆண்கள் குடிக்கு அடிமையாகி விட்டார்கள். கவுன்சிலர் கடையை மாற்றவில்லை. அய்யா மட்டும் கடையை மாற்ற போராடிக் கொண்டிருக்கிறார். குடிமகனில் ஒருவனாக கந்தனும் மாறிவிடுகிறான். கணவன் குடிப்பதை தாங்க முடியாமல், யாரும் எதிர்பார்க்காத காரியத்தைச் செய்து கிராமத்தையை அதிர வைக்கிறாள் செல்லக்கண்ணு. அய்யாவின் போராட்டம் வென்றதா? செல்லக்கண்ணுவின் அந்த முடிவு என்ன?,கந்தன் குடியிலிருந்து மீண்டானா? என்பதை படத்தில் விளக்கியுள்ளார்கள்.