காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா உத்தரபிரதேசத்தில் கட்சியின் பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக மாநிலத்தில் தீவிரமாக பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

முதல் இடமாக கங்கை நதி சென்றார் அங்கு மூன்று நாள் யாத்திரையை தொடங்கி இருக்கிறார். பின்பு கங்கை நதியில் படகின் மூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவைப் பெற்றார். கங்கை யாத்திரையில் பங்கேற்பதற்காக நேற்று முன் தினமே அவர் லக்னோவிற்கு சென்றார். பின்பு நேற்று காலை அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து அவரது பிரச்சாரத்தை மக்களுடன் கட்சி கொடிகள் மூலம் தொடங்கினார்கள். திரிவேணி சங்கமத்தில் அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் ஸ்வராஜ் வீட்டிற்கும் சென்றார். .
அப்போது நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். எதற்கும் அஞ்சக்கூடாது எல்லாம் சரியாகிவிடும் என அவர் சொல்லித்தருவார் என்று டுவிட்டர் வலைத்தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் பிரியங்கா. அவரது கங்கை யாத்திரை நாளை வாரணாசியில் நிறைவு பெற இருக்கிறது.