fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

விஷ சாராயம் குறித்து பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம்!!

விஷ சாராயம் குடித்தல், அதனால் உயிர் இழத்தல் என்பது போன்ற சம்பவங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அதிக அளவில் காணப்பட்டது, இதனைக் கட்டுக்குள் கொண்டு வர சாராய ஒழிப்பினை சில மாநிலங்கள் செய்தன.

அதன்படி கள்ளச் சாராயம் ஒழிக்கப்பட்டு, தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் அரசாங்கமே மதுபானக் கடைகளை திறந்து நடத்தி வருகின்றது. ஆனால் நேற்று ஒரேநாளில் விஷ சாராயாத்தால் உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் 6 பேர் பலியாகி உள்ள சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

விஷ சாராயம் குறித்து பாஜக அரசுக்கு பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம்!!

நேற்று இரவு விஷ சாராயம் அருந்தி 15 பேர் மயக்கமான நிலையில் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உடனடியாக உயிர் இழந்தனர்.

இதனால் அந்த சாராயக் கடையை நடத்தி வரும் கணவன் மற்றும் மனைவி இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவில், “உத்தர பிரதேச மாநிலத்தினைப் பொறுத்தவரையில் லக்னோ, பிரோசாபாத், ஹாப்பூர், மதுரா மற்றும் பிரயாக்ராஜ் போன்ற நகரங்களில் விஷ சாராயத்தினை உண்டு 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால் விஷ சாராய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு தாமதிப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

வேலூர் சிறையில் 21 ஆவது நாளாக முருகன் உண்ணாவிரதம்

World News

வாரணாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் மோடி

N N

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான் சுஜித்!- தொடர் முயற்சிகள் தோல்வி

World News