fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

உண்மையை பேசிய பிரியா வாரியர்

ஓமர் லுலு இயக்கத்தில் வெளியான படம் ‘ஒரு அடார் லவ்’ இந்த படத்தில் ரோ‌ஷன், பிரியா வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபலமான முக்கிய நடிகர்கள் அனைவருமே பிரியா வாரியரின் கண் சிமிட்டலுக்கு ரசிகர்கள் ஆனார்கள். இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் காதலர் தினத்தன்று வெளியானது.

உண்மையை  பேசிய  பிரியா வாரியர்

படமானது மிக மோசமான விமர்சனங்களை பெற்று பெரும் தோல்வியை சந்தித்து வந்துள்ளது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் ஒருவர் தனக்குத்தான் முதலில் முக்கியத்துவம் இருந்தது என்றும், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானததால் தான் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம் அதனால்  பிரியா வாரியரின் கதையை மாற்றிவிட்டனர் என்று நூரின் ஷெரீப் கூறியுள்ளார்.  அதன்பிறகு இயக்குநர் அளித்துள்ள பேட்டியில் பாடலில் ஹிட் ஆனவுடன் தயாரிப்பாளர் பிரியா வாரியரை ஹீரோயினாக படம் எடுக்க சொன்னாராம், இதனால் தான் கதை மாறியது என்று இயக்குநர் கூறியிருந்தாராம். இதை குறித்து பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவுட்ட செய்தி நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்குப் பிரச்சினை தான் வரும். ஏன் அவர்களைப் போல இருக்க வேண்டும்? நான் அமைதியாக இருக்கிறேன், என்று பிரியா வாரியர் கூறியுள்ளார்.

Related posts

நயன்தாரா பயங்கர புத்திசாலி- மனோபாலா பேட்டி!!

N N

லண்டன் வகுப்பறையில் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் வைரலாகும் வீடியோ

TamilTwin India

சிறையில் இருக்கும் சரத்குமாருக்கு காதல் கடிதம் அனுப்பிய ராதிகா!

TamilTwin India