fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

வடக்கில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை

வடக்கு மாகாணத்தில் ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவித்துள்ள மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், சட்டத்தரணி எல்.இளங்கோவன், பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு நாளை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிலையில் தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையான ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டியதில்லை என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

இது ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கு சிறப்பு விடுப்பாக கணிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் அவர்கள் பாடசாலை அதிபர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேல் மாகாணம் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வடக்கு மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கினால் அவர்களுக்கும் சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கையை மோதல் களமாக மாற்ற விரும்புகின்றனர் – ஜயநாத் கொலம்பகே

SL News

நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டங்களை கட்டிமுடிக்க கடன்உதவி – மத்திய அரசு

TamilTwin India

புத்தூரில் கோர விபத்து: நால்வர் படுகாயம்!

TamilTwin