fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரசன்னா, ஐஸ்வர்யா தனுஷ்

    தனுஷ் மற்றும் சினேகா இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் இருந்து துவங்கி உள்ளது.  குற்றாலத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பினை நடத்துவதாக படக்குழுவினர் அறிவித்து இருக்கின்றனர்.   இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.  இப்படத்தினை துரை செந்தில் குமார் இயக்குகிறார்.  குற்றாலத்தில் நடைபெறும் படப்பிடிப்பினை நடிகர் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் நடிகை சினேகாவின் கணவர் நடிகர் பிரசன்னாவும் பார்வையிட்டனர்.  பின் இவர்கள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரசன்னா, ஐஸ்வர்யா தனுஷ்

      இவர்கள் இருவரையும் கோவில் பட்டாசாரியார்கள் ஆண்டாள் சன்னிதிக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.  பின் அவர்கள் இருவரும் கோவிலில் உள்ள யானைகளுக்கு பழம் கொடுத்தனர்.   மணவாள மாமுனிகள் சன்னிதிக்கு சென்று அங்கும் தரிசனம் செய்தனர்.  இவர்களுக்கு சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.  இதனை அடுத்து இவர்கள் இருவரும் மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.

Related posts

ஜி.வி.பிரகாஷின் பாடல்களுக்கு சூர்யா பாராட்டு

N N

ஜெயலலிதா படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு முன்னணி நடிகர்கள்

TamilTwin India

ரெய்டால் விஜய் எடுத்த அதிரடி முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் !

TamilTwin India