Friday, February 3, 2023
Homeஆன்மிகம்யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தில் நாளை போயாதின ஆன்மீக நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தில் நாளை போயாதின ஆன்மீக நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தினரின் ஏற்பாட்டில் போயாதின ஆன்மீக நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை(07.12.2022) சேர்.பொன்.இராமநாதன் வீதி, யாழ்.திருநெல்வேலியில் அமைந்துள்ள மேற்படி நிலைய மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அதிகாலை, காலை நிகழ்வுகளாக போயாதின நிகழ்வுகள் இடம்பெறும்.

அதிகாலை நிகழ்வுகள் அதிகாலை-4.45 மணியளவில் ஓம்காரம், தியானம், சுப்ரபாதத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து நகர சங்கீர்த்தனம், மங்களாராத்தி என்பனவும் இடம்பெறும்.

காலை நிகழ்வுகள் காலை-8.45 மணிக்குப் பிரசாந்திக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து வேத பாராயணம், அஷ்டோத்திரம், ஓம் ஸ்ரீ சாயிராமாய நம மந்திரத்துடன் பிடி அரிசி போடுதல், நாமம் எழுதுதல், காயத்ரீ மந்திர உச்சாடனம், ஜோதி தியானம், பக்தலாலா- திருநீற்றுப் பதிகம் ஓதுதல், நாம பஜனை என்பன இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்-11.30 மணியளவில் அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய ஆசிரியர் திருமதி.சிவப்பிரியா இராஜ்குமார்” இறைபக்தியே வாழ்வை வளமாக்கும்” எனும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து பஜனை, மஹா மங்களாராத்தியுடன் போயாதின ஆன்மீக நிகழ்வுகள் நிறைவுபெறும்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் சத்தியசாயி சேவா நிலையத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular