fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » திடீர் மின்சாரத் தடையால் யாழ். மக்கள் பெரும் அவதி (VIDEO, PHOTOS)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

திடீர் மின்சாரத் தடையால் யாழ். மக்கள் பெரும் அவதி (VIDEO, PHOTOS)

இன்று திங்கட்கிழமை(08) இரவு-07 மணி முதல் சுமார் இரண்டு மணித்தியாலங் களாகத் திடீரென மின்சாரம் தடைப்பட்டமையால் யாழ். குடாநாட்டு மக்கள் தமது அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.

திடீர் மின்சாரத் தடையால் வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கைகள், வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கைகள், வீடுகள் தோறும் பல்வேறு செயற்பாடுகள் உட்படப் பல செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

இரவு-07 மணிக்குத் தடைப்பட்ட மின்சார விநியோகம்  மீண்டும் இரவு-09 மணிக்கு சுமுகமானது.                                      

இதேவேளை, அனுராதபுரம் புதிய க்ரிட் (Grid) உப மின்நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வடமாகாணத்திற்கான மின்சார விநியோகம் இன்றிரவு (08) தடைப்பட்டதாக இலங்கை மின்சாரசபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(செய்தித்தொகுப்பு மற்றும் காணொளி-செ.ரவிசாந்) 

Related posts

புத்தாண்டைக் கொண்டாடும் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

SL News

இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்

SL News

ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் பட்டதாரிகளுக்கு துரோகமிழைத்துள்ளது!! (Photos)

TamilTwin