வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவாகியுள்ள நிலையில் புயலாக மாறி மகாபலிபுர கடற்கரையில் கடக்கக் கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இந்த நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன மழையானது வெளுத்துவாங்கி வருகிறது.

அதாவது இந்த மழையானது இடைவிடாமல் பெய்வதுடன் தண்ணீர் சாலைகளில் மற்றும் வீட்டின் வெளிப்புறங்களில் தேங்கிக் கிடக்கச் செய்கின்றது.
தற்போது கொரோனாவில் இருந்து தமிழகம் ஓரளவு மீண்டுள்ள நிலையில், கொட்டித் தீர்க்கும் மழையால் மக்கள் காய்ச்சல், சளித் தொல்லையால் அவதிக்குள்ளாகலாம் என தமிழக சுகாதார அமைச்சகம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் வீட்டில் உள்ளோர் முடிந்த அளவு வெளியே வராமலும், வீட்டினுள் பாதுகாப்பான முறையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.