முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு ஃபேஸ்பேக்கினை வீட்டில் செய்வது எப்படி என்றும், அதனைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:
உருளைக்கிழங்கு- 1
பாதாம் பருப்பு- 5
நல்லெண்ணெய்- 1 ஸ்பூன்
செய்முறை:
1. உருளைக் கிழங்கினை தோல் உரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. அடுத்து பாதாம் பருப்பினை நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும்.
3. அடுத்து இவை இரண்டையும் மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
4. அடுத்து இதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும்.
இப்போது சூப்பரான ஃபேஸ்பேக் ரெடி, இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து நீரில் கழுவினால் முக அழகு கூடும்.