fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

உருளைக்கிழங்கு பிரியாணி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்கறிகளில் மிகவும் பிடித்தது உருளைக்கிழங்கு. அதை எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் இன்று உருளைக்கிழங்கை வைத்து அருமையான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு பிரியாணி

உருளைக்கிழங்கு பிரியாணி - Potato Biriyani

உருளைக்கிழங்கு பிரியாணி உருளைக்கிழங்கு பிரியாணி Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பாஸ்மதி அரிசி - 1 கப்,
  • உருளைக்கிழங்கு - 2,
  • வெங்காயம் 2,
  • தக்காளி - 2,
  • பச்சை மிளகாய் - 2,
  • கொத்தமல்லி,
  • புதினா - 1/4 கப்,
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • பட்டை - 2,
  • கிராம்பு - 3,
  • ஏலக்காய் - 3,
  • அன்னாசி பூ - 1,
  • பிரியாணி இலை - 1,
  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்,
  • எண்ணெய், நெய் - 1/4 கப்,
  • உப்பு - தேவைக்கு.

Instructions

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மற்றும் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிகொள்ளவும் அரிசியை நன்றாக கழுவி வைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு  இஞ்சி பூண்டு விழுது, தக்காளி  சேர்த்து வதக்கவும். அதில் உருளைக்கிழங்கு சேர்த்து தேவையான அளவு தண்ணீர், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை போட்டு கொதி வந்தவுடன் அரிசியை சேர்த்து மிதமான சூட்டில் 15 நிமிடம் வைத்து இறக்கவும்.

 

    

Related posts

சத்து நிறைந்த பருப்புக் கீரை கோதுமை அடை

N N

வெயிலுக்கு ஏற்ற நாவல் பழம் மில்க்ஷேக்

N N

சுவையான மீன் மசாலா

N N