fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகையை பின்னால் தட்டிய போனிகபூர்

ஸ்ரீதேவியின் மர்ம மரணத்தை அடுத்து எழுந்த சர்ச்சைகளில் இருந்து மீண்டும் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கிவரும் போனிகபூர், ஒரு நடிகையை தவறான முறையில் தொட்டதாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

     போனிகபூர் ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்; இறப்பதற்கு முன்பு நடிகர் அஜித்திடம் ஸ்ரீதேவி விடுத்த வேண்டுதலின் பேரில் தற்பொழுது அவரது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தையும் போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் சக தயாரிப்பாளரான ஜெயந்திலால் காடாவின்  மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருந்த போனிகபூர் பாலிவுட் நடிகை ஊர்வசி ரத்துல்லாவிடம் பேசி கொண்டிருந்தார். அங்கிருந்து புறப்படும் போது நடிகையின் பின்னால் தட்டிவிட்டு விடைபெற்ற அவரது வீடியோ சர்ச்சையுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகையை பின்னால் தட்டிய போனிகபூர்

     இதனால் நடிகையிடம் போனிகபூர் தவறாக நடந்து கொண்டதாக பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் நடிகை ஊர்வசி ரதுல்லாவோ டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நானும், போனிகபூரும் இருக்கும் வீடியோவை வைத்து கேலி செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறினார். அவர் ஜென்டில்மேன். சமூக வலைத்தளங்களில் யோசிக்காமல் கேலி செய்வது வருத்தம் அளிக்கிறது. இப்படி செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள். நான் போனிகபூர் மீது மரியாதை வைத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts

நயன்தாராவை கண்டால் அடிப்பேன், கோபத்தின் உச்சியின் பிரபல நடிகரின் மனைவி.!

TamilTwin India

புதிய வரலாறு படைத்த விஜயின் பாடல்

N N

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டிரெய்லர் வெளியாகின்றது !

TamilTwin India